கரோனா வைரஸ் தாக்கம் பிரிட்டனில் தீவிரமாக உள்ள நிலையில் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனையும் வைரஸ் விட்டுவைக்கவில்லை. அண்மையில் கரோனாவால் போரிஸ் ஜான்சன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், நோய்யின் தாக்கம் தீவிரமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டு நாட்கள் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நோய் தாக்கத்திலிருந்து மெல்ல குணமடைந்த ஜான்சன், தற்போது கரோனா பாதிப்பிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளார்.
இதையடுத்து, அவர் மீண்டும் தனது பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது வெளியுறவுத்துறை செயலருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ள போரிஸ், சில அமைச்சர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் அவர் முழு வீச்சில் செயல்படுவார் எனவும் பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 1.15 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க:கரோனா: 403 ஆண்டுகளில் முதல்முறையாக மூடப்படும் மதுபானத் தொழிற்சாலை