தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உலக சுகாதார அமைப்பை எச்சரித்த பிரேசில்! - அதிபர் ஜெய்ர் போல்சனாரோ

ரியோ டி ஜெனிரோ: உலக சுகாதார அமைப்பிலிருந்து பிரேசில் வெளியேறுவது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.

bolsonaro
bolsonaro

By

Published : Jun 7, 2020, 3:00 AM IST

உலக சுகாதார நிறுவனம் அரசியல் அமைப்பாக செயல்படுவதை நிறுத்தாவிட்டால், பிரேசில் இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவது குறித்து பரிசீலிக்கும் என்று அந்நாட்டின் அதிபர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரேசிலில் கரோனா தொற்றுநோய் அதிகளவில் பரவிவரும் சூழலில், ஊரடங்கை நீக்கும் போல்சனாரோவின் முயற்சிகளுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்திருந்தது.

இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ், ‘ஊரடங்கை தளர்த்துவதற்கான அளவு கோளாக வைரஸ் தொற்று பரவும் வேகம் கட்டுக்குள் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இறப்பவர்களின் பட்டியலில், உலகளவில் பிரேசில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஆயிரத்து 437 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அந்நாட்டில் இந்த தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 21 ஆக அதிகரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details