தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

எண்ணப்படும் மல்லையாவின் நாள்கள்.. மத்திய புலனாய்வு அமைப்பிற்கு வெற்றி

டெல்லி: லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் இந்தியா கொண்டுவரப்படுவது உறுதியாகியுள்ளது.

Vijay Mallya
Vijay Mallya

By

Published : May 15, 2020, 11:21 PM IST

வங்கி முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மேல்முறையீடு மனுவை லண்டன் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது. இந்த நகர்வு மத்திய புலனாய்வு அமைப்பின் விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனரும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபருமான விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்து முறைகேடான முறையில் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார்.

மல்லையாவை இந்தியா கொண்டுவர மத்திய புலானாய்வு அமைப்பான சிபிஐ, இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச புலனாய்வு அமைப்புகளிடம் தொடர்பு கொண்டு பல்வேறு முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், சிபிஐ நடவடிக்கைக்கு எதிராக விஜய் மல்லையா சார்பில் தொடர்ச்சியாக முறையீட்டு மனுக்கள் லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த லண்டன் நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அடுத்த 20 நாள்களுக்குள் அவர் இந்தியா கொண்டுவரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான முன்னெடுப்புகளை மத்திய புலனாய்வு அமைப்பு தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறது. இந்த முக்கிய நகர்வுக்கு முதன்மை காரணம் மத்திய புலனாய்வு அமைப்பின் விடாப்பிடியான முன்னெடுப்புகளே என வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:வானில் எப்போது திரும்பும் இயல்பு நிலை?

ABOUT THE AUTHOR

...view details