பிரிட்டனின் கார்ன்வால் நகரில் நாளை முதல் வருகிற 13ஆம் தேதி வரை ஜி-7 மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஜி-7 கூட்டமைப்பில் உள்ள 7 உறுப்பு நாடுகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் , 8 நாள் சுற்றுப்பயணமாக ஐரோப்பா சென்றுள்ளார்.
ஜி7 மாநாடு: பிரிட்டன் பறந்த ஜோ பைடன் - America joe biden
ஐரோப்பாவில் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜோ பைடன், பிரிட்டனில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார்.
ஜி7 மாநாடு
மேலும், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடனான சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்னர் பைடன் செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம் ஆகும்.
இதுமட்டுமின்றி, வருகிற 16ஆம் தேதி ஜெனிவாவில் ரஷ்ய அதிபர் புதினை, அமெரிக்க அதிபர் பைடன் சந்தித்துப் பேசவுள்ளது குறிப்பிடத்தக்கது.