தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'ஐசியூ நோயாளிகளை காப்பாற்றும் சிறந்த நோயெதிர்ப்பு மருந்துகள்'- ஆய்வில் தகவல்

சிட்னி: அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, சிறந்த நோயெதிர்ப்பு மருந்துகள் அளிப்பதன் மூலம் அவர்களை காப்பாற்ற முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

antibiotic dosing guidelines  queensland antibiotic dosing  antibiotic dosing icu  therapeutic drug monitoring  அவசர சிகிச்சைப் பிரிவு நேயெதிர்ப்பு மருந்து  குயின்ஸ்லாந்து ஆராய்ச்சியாளர்கள்  கரோனா சிகிச்சை  நோயெதிர்ப்பு மருந்து ஆய்வு
antibiotic dosing guidelines queensland antibiotic dosing antibiotic dosing icu therapeutic drug monitoring அவசர சிகிச்சைப் பிரிவு நேயெதிர்ப்பு மருந்து குயின்ஸ்லாந்து ஆராய்ச்சியாளர்கள் கரோனா சிகிச்சை நோயெதிர்ப்பு மருந்து ஆய்வு

By

Published : May 12, 2020, 8:26 AM IST

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்ட புதிய ஆன்டிபயாடிக் சிகிச்சை வழிமுறைகளை ஏற்றுக்கொண்டால், உலகெங்கிலும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஏராளமான நோயாளிகளை காப்பாற்ற முடியும் என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மற்றும் பூஞ்சை காளான் மருந்துகளின் செறிவுகளை மேம்படுத்த ஒரு உலகளாவிய சிகிச்சை மற்றும் கண்காணிப்பு வழிகாட்டுதல்களையும் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இன்டென்சிவ் கேர் மெடிசின் இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வில்ல், “சிறந்த வழிகாட்டுதல்கள் நோயாளிகளை குணப்படுத்தும், நேரத்தை விரைவுப்படுத்தலாம் அல்லது ஒரு மோசமான நிலையில் இருக்கும் நோயாளியை இறக்கவிடாமல் காப்பாற்றக்கூடும்” என்பதைக் சுட்டிக்காட்டுகிறது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு ஆராய்ச்சியாளர் ஜேசன் ராபர்ட்ஸ், “கடுமையான இந்த தொற்றுநோய்களுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பதில் உலகம் முழுவதும் மாறுபாடு உள்ளது. சில நேரங்களில் இது ஒரு யூகிக்கும் விளையாட்டு போன்றதாக உள்ளது” என்று கூறினார்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள அனைத்து நோயாளிகளும் தற்போது இதேபோன்ற ஆன்டிபயாட்டிக் மற்றும் அளவிடப்பட்ட மருந்துகளுடன் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் தனிப்பயனாக்கலின் பற்றாக்குறை ஒரு நோயாளியை நோய்வாய்ப்படுத்தக்கூடும், மேலும் மரணத்தை கூட ஏற்படுத்தக்கூடும்.
மேலும் ராபர்ட்ஸ், “அதிகப்படியான ஆன்டிபயாட்டிக்குகளின் பயன்பாடு நோயாளிக்கு மருந்தின் செயல்திறனைக் கட்டுப்படுத்தும் பாக்டீரியாவின் எதிர்ப்பை செயல்படுத்த முடியும்” என்றும் கூறினார்.

இந்த வல்லுநர்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள 400 (ஐ.சி.யூ) நோயாளிகளின் தகவல்களை ஆய்வு செய்தனர். அதில் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளுக்கு பாதகமான விளைவுகளைக் கண்டறிந்தனர். ஏனெனில் இந்த அவர்களின் ஆன்டிபயாடிக் சிகிச்சை அவர்களின் உடல்நிலைக்கு உகந்ததாக இல்லை.

இது குறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹபீஸ் அப்துல் அஜீஸ் கூறுகையில், “தேவையான அளவில் அளிக்கப்படும் ஆன்டிபயாட்டிக்கினால் ஒரு நோயாளியின் உடல்நிலை கணிசமாக மேம்பட்டதைக் கண்டறிந்தோம்” என்றார்.

மேலும், ஆஸ்திரேலியாவிலுள்ள நோயாளிகளின் நிலை குறித்து டாக்டர் அப்துல் அஜீஸ் கூறுகையில், “ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. இந்த நோயாளிகளில் 13 சதவீதம் பேர் ஒவ்வொரு ஆன்டும் இறந்துவிடுகிறார்கள்” என்றார்.

இந்நிலையில் இத்தகைய புதுமையான வழிகாட்டுதல்களை 11 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 16 ஆன்டிபயாடிக் வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர். இவர்கள் துல்லியமான மருந்தின் அளவை கணிப்பதற்கும் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை முறைகளை உருவாக்குவதற்கும் மேம்பட்ட மென்பொருளைப் பயன்படுத்த பரிந்துரைத்தனர்.

மேற்கூறிய ஆய்வின்படி, “நோயெதிர்ப்பு மருந்துகள் தேவைப்படும் ஐ.சி.யூ நோயாளிகள் பொதுவாக செப்சிஸ் (நோய்த்தொற்றால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நிலை), நிமோனியா அல்லது உடலில் ஏற்படும் எரிச்சலால் தோன்றும் நோய்த்தொற்றினால் உடலின் முக்கிய பாகம் உறுப்பின் செயலிழப்பு போன்றவற்றால் பாதிக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'வைரஸ் மனித குலத்தை தொடர்ந்து பாதிக்கும்'- ஹர்ஷ் வர்தன் பிரத்யேக பேட்டி

ABOUT THE AUTHOR

...view details