ஐரோப்பிய நாடான பெல்ஜியமில் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12ஆம் தேதி தொடங்கிய இந்த ஊரடங்கால், ஏராளமான தொழில் துறைகள் முடங்கியுள்ள சூழலில், அதனைத் தளர்த்துவது குறித்து அந்நாட்டுப் பிரதமர் சோப்பியா வில்மெஸ் விரிவான திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'பொது போக்குவரத்துகளில் பயணிக்கும் 12 அல்லது அந்த வயதுக்கும் மேற்பட்டோர் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். ஆகையால், மக்களுக்கு முகக் கவசங்கள் கிடைக்கும் பொருட்டு, முதல் கட்டமாக மே 4ஆம் தேதி முதல் துணிக் கடைகளைத் திறக்கலாம்.
பிறகு, ஒரு வாரம் கழித்து மற்ற கடைகளைத் திறக்கலாம். மேலும், மே 18ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கலாம். ஆனால், ஒரு வகுப்பறையில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலக் கூடாது.