சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஆல்ஸ்டு விழாவில் இடம்பெற்றிருந்த பொம்மைகள், யூத சமூகத்தினரைக் கேலிசெய்யும் வகையிலிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட யுனெஸ்கோ, குறிப்பிட்ட சமூகத்தை கேலிசெய்யும் வகையில் நடைபெற்ற ஆல்ஸ்டு திருவிழாவை பாரம்பரிய கலாசார பட்டியலிலிருந்து நீக்கியது. கொலம்பியா தலைநகர் பொகோடாவில் நேற்று நடந்த யுனெஸ்கோ கூட்டத்தில் இந்த முடிவானது எடுக்கப்பட்டது.
இதுகுறித்து யுனெஸ்கோ கலாசாரத் துறை துணைத் தலைமை இயக்குநர் எர்நெத்தோ ஒதோனி கூறுகையில், "...ஆல்ஸ்டு திருவிழாவிற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குறிப்பிட்ட சில சமூகங்களை கேலிசெய்யும் எந்த ஒரு காலாசார நிகழ்வும் யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெறக்கூடாது என்பதே எங்களது நோக்கமாகவுள்ளது. இதன் காரணமாகவே பெல்ஜியம் நாட்டின் ஆல்ஸ்டு திருவிழா யுனெஸ்கோ பாரம்பரிய கலாசார சின்னங்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது" என்றார்.
பகோடாவில் நடந்த யுனெஸ்கோ கூட்டம் யுனெஸ்கோ கலாசார பட்டியலிலிருந்து ஒரு நாட்டின் பாரம்பரிய திருவிழா நீக்கப்படுவது இதுவே முதன் முறையாகும். அதேசமயம், பெரு நாட்டின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட 40 கலாசார விழாக்கள் பட்டியலில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஸ்கியூபா டைவிங் செய்து சுறாக்களுக்கு உணவளித்த கிறிஸ்துமஸ் தாத்தா!