தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜெர்மனி விலங்கியல் பூங்காவில் குட்டி யானை அட்டகாசம்! - குட்டி யானை

கலோன்: ஜெர்மனியில் பிறந்து 10 நாள்களே ஆன குட்டி யானை, தனது அட்டகாசமாக செய்கைகளின் மூலம் அனைவரின் கவனங்களையும் ஈர்த்துள்ளது.

Cologne Zoo Baby elephant Leev Ma Rie Leev Marie குட்டி யானை ஜெர்மனி
Cologne Zoo Baby elephant Leev Ma Rie Leev Marie குட்டி யானை ஜெர்மனி

By

Published : Jun 27, 2020, 2:14 PM IST

ஜெர்மனியின் கலோன் வனவிலங்கியல் பூங்காவில் கடந்த 17ஆம் தேதி யானை ஒன்று பிறந்தது. அந்த யானைக்கு லீவ் மேரி என்ற பாடலிலுள்ள லீ மார் ரே (அன்பு) என்ற வரிகள் பெயராக சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், லீ மார் ரே நலமுடன் இருப்பதாகவும், அதன் எடை 100 கிலோவாக இருப்பதாகவும் விலங்கியல் பூங்கா பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனி விலங்கியல் பூங்காவில் குட்டி யானை அட்டகாசம்!

இந்த யானை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தாய் யானையுடன் இணைந்து குளிப்பது, விளையாடுவது என செம குஷியில் குட்டி யானை சுற்றிவருகிறது.

இது தொடர்பான காணொலிகள் வைரலாகிவருகின்றன. கலோன் விலங்கியல் பூங்காவில் மொத்தம் 14 யானைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காணொலி: வெள்ளை நிற மலைபாம்பை, புடலங்காய் போல் தூக்கிய இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details