வியன்னா: ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, ஆஸ்திரிய நாட்டில் ஒரு வாரமாக கரோனா வைரஸ்(COVID cases surge) பரவல் அதிகரித்து வருகிறது.
உருமாற்றமடைந்த ஏஒய்.4.2 கரோனா வைரஸ் பரவிவருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, அந்நாட்டு மக்களில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு (lockdown for unvaccinated) மட்டும் அந்நாட்டு அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. அதனடிப்படையில், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவும், அத்தியாவசிய பொருள்களை வாங்கச் செல்லவும் மட்டுமே வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது.
இதையும் படிங்க:ரஷ்யாவில் அதிகரிக்கும் கரோனா உயிரிழப்பு - மீண்டும் ஊரடங்கு