தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜி-7 மாநாடு: ஏழ்மையான நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்க முடிவு - G-7 countries promises vaccination

இங்கிலாந்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில், கரோனாவை எதிர்த்துப் போராடும் ஏழ்மையான நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவது, காலநிலை மாற்றம் தொடர்பாக இணைந்து செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

As summit ends, G-7 urged to deliver on vaccines
ஜி-7 மாநாடு: ஏழ்மையான நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்க முடிவு

By

Published : Jun 13, 2021, 6:35 PM IST

பால்மவுத் (இங்கிலாந்து):தொழில் வளர்ச்சியில் வளர்ந்த நிலையில் இருக்கும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அடங்கியது ஜி-7 கூட்டமைப்பு. இந்த கூட்டமைப்பின் மாநாடு இங்கிலாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இம்மாநாடு இன்றுடன் முடிவடையும் நிலையில், கரோனாவை எதிர்த்துப் போராட உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்க ஜி-7ல் உள்ள நாடுகள் முடிவெடுத்துள்ளன.

சீனா போன்ற சர்வாதிகார போட்டியாளர்களைவிட கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஏழ்மையான நாடுகளுக்கு உதவ விரும்புவதை இந்த மாநாடு வெளிப்படுத்தியுள்ளது.

மேலும், உய்குர் இஸ்லாமியர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை செலுத்தும் சீனாவுக்கு எதிராக ஜி-7ல் உள்ள ஏனைய நாடுகள் ஒருமித்த குரல் கொடுக்கவேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.

ஆனால், ஜி-7ல் உள்ள சில ஐரோப்ப நாடுகள் சீனாவுடன் பெரிய பிளவை ஏற்படுத்த விரும்பாதது, அந்த நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இருந்து தெளிவாகிறது.

இதையும் படிங்க:ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

ABOUT THE AUTHOR

...view details