தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நான்கில் ஒருவருக்கு பாதுகாப்பில்லா குடிநீர் - ஆய்வில் தகவல் - சர்வதேச சுகாதார நிலவரம்

உலகில் நான்கில் ஒருவருக்கு பாதுகாப்பு இல்லாத குடிநீர்தான் கிடைப்பதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

safe drinking water
safe drinking water

By

Published : Jul 2, 2021, 10:03 PM IST

உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப் அமைப்பு இணைந்து சர்வதேச அளவில் சுகாதாரமான குடிநீர் நிலை குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், பல்வேறு முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்கில் ஒருவருக்கு பாதுகாப்பில்லா குடிநீர்

ஆய்வுத் தகவலின்படி, சர்வதேச அளவில் நான்கில் ஒருவருக்கு சுகாதாரமற்ற பாதுகாப்பில்லா குடிநீர்தான் கிடைக்கிறது. மேலும், உலகில் பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு முறையான சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை.

கோவிட்-19 தொற்றிலிருந்து தப்பிக்க சோப்பு போட்டு கை கழுவுதல் முக்கியம் என்ற நிலையில், பத்தில் மூன்று பேருக்கு இந்த சோப், நீர் வசதிகள் கிடைப்பதில்லை.

முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் தற்போது நல்ல முன்னேற்றம் தெரிந்தாலும், ஆப்ரிக்க நாடுகளில் இந்த முன்னேற்றம் மெதுவாகவே காணப்படுகிறது. சர்வதேச அளவில் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு நீர், சுகாதாரம் ஆகிய துறைகளில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஒரு கிராமத்தின் க(த)ண்ணீர் கதை!

ABOUT THE AUTHOR

...view details