தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 11, 2021, 12:53 PM IST

Updated : Jan 11, 2021, 1:24 PM IST

ETV Bharat / international

'வரலாற்றில் மிக மோசமான அதிபராக ட்ரம்ப் பட்டியலிடப்படுவார்' - அர்னால்டு ஸ்வார்செனேகர்

'நான் அந்த சத்தத்தை என் காதுகளில் கேட்டிருக்கிறேன். நான் அந்த வலியை சொந்த கண்கள் கொண்டு பார்த்திருக்கிறேன். அவ்வாறு துன்புறுத்தும் ஒவ்வொருவருக்கும் அவரது உடல்களில் ஒரு சிறிய துண்டு அளவாவது வலி இருக்கும். நான் பார்த்ததில், அது மிக உணர்ச்சிகரமான வலி. இது எல்லாம் எதன்மூலம் தொடங்குகிறது என்றால் பொய்... பொய்... பொய் மற்றும் சகிப்புத்தன்மை. இதன்மூலம் மட்டுமே நிகழ்கிறது'

அர்னால்டு ஸ்வார்செனேகர்
அர்னால்டு ஸ்வார்செனேகர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு ஜோ பைடன் அதிபராக வெற்றிபெற்றார்.

அவரது வெற்றியை அங்கீகரித்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் ட்ரம்ப் ஆதரவாளர்களும் அமெரிக்காவின் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களைத் தாக்கி வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவின் தலைமையிடத்தில் நடந்த இச்சம்பவம் பல்வேறு நாட்டினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதுகுறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநரும், பிரபல புகழ்பெற்ற பாடிபில்டருமான அர்னால்ட் ஸ்வார்செனேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலிப் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

'அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து வந்தவன் என்கிற முறையில் அமெரிக்கர்களுக்கும் அமெரிக்க நண்பர்களிடமும் அண்மையில் நடந்த வன்முறை குறித்து ஒரு சில வார்த்தைகளைக் கூற ஆசைப்படுகிறேன்.

நான் ஆஸ்திரியாவில் வளர்ந்தவன். எனக்கு இரவு நேரங்களில் வீட்டின் கதவை உடைத்து நகைகளை எடுப்பவர்கள் குறித்த விழிப்புணர்வு மிக அதிகமாக இருக்கும்.

1938ஆம் ஆண்டு முதல் நாஜி பேரினவாதிகளால், இரவு நேரங்களில் வீடுகளில் இருக்கும் நகைகளை எடுப்பதற்காக வெறித்தனமான தாக்குதல், ஒவ்வொரு வீடுகளின்மேலும் மேற்கொள்ளப்படுவதே அதற்குக் காரணம்.

கடந்த புதன்கிழமை(ஜன.6), வீட்டின் ஜன்னல்கள் அமெரிக்காவில் உடைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் அமெரிக்க நாட்டின் தலைமைப் பீடத்தில் இத்தாக்குதல் நடைபெற்று இருக்கிறது. இதன்மூலம் நாம் முன்னெடுத்துவரும் கொள்கைகள் நொறுங்கியுள்ளன. அவர்கள் அக்கட்டடத்தில் கதவினை மட்டும் உடைக்கவில்லை. அமெரிக்காவின் ஜனநாயகத்தையும் சேர்த்தே தான் உடைத்துள்ளனர்.

அந்த வன்முறையாளர்கள் நாட்டின் கொள்கைகளை கீழே போட்டு மிதித்துள்ளனர்.

நான் வளர்ந்தநாட்டில், ஜனநாயகம் சீர்குலைக்கப்பட்ட நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இரண்டாம் உலகப்போர் முடிந்து அடுத்த இரண்டாண்டுகளில், அதாவது, நான் 1947ஆம் ஆண்டு பிறந்தேன்.

வீடுகளில் இருக்கும் கண்ணாடிகளை உடைக்கின்ற, குற்றச்செயல்களில் ஈடுபட்ட, மது குடிப்பவர்களுக்கு மத்தியில் தான் நான் வளரும் சூழ்நிலை இருந்தது. அப்போது அது ஒரு கொடூரமான ஆட்சியாக இருந்தது.

எல்லா நாஜிக்களும் மூர்க்கத்தனமானவர்கள் அல்ல. நிறைய நாஜிக்கள், இத்தகைய செயல்களால் அடுத்தடுத்து தெருவுக்கு வந்தனர். ஒவ்வொரு தெருக்களிலும் அவர்கள் இருந்தனர்.

இதை நான் ஒருபோதும் வெளிப்படையாக பகிர்ந்ததில்லை. ஏனென்றால், அது வலி மிகுந்த நினைவு.

என்னுடைய அப்பாவும் வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ குடித்துவிட்டு, வந்து எனது அம்மாவிடம் கூச்சலிடவோ அடிக்கவோ செய்வார்.

ஆனால், அதை நான் தடுக்கமாட்டேன். ஏனென்றால், இந்நிகழ்வுபோன்று என் அண்டைவீட்டிலும் இதை ஒத்த சம்பவம் நிகழும். இது அவ்வாறே அடுத்தடுத்த வீடுகளிலும் தொடரும். நான் அந்த சத்தத்தை என் காதுகளில் கேட்டிருக்கிறேன். நான் அந்த வலியை சொந்த கண்கள் கொண்டு பார்த்திருக்கிறேன். அவ்வாறு துன்புறுத்தும் ஒவ்வொருவருக்கும் அவரது உடல்களில் ஒரு சிறிய துண்டு அளவாவது வலி இருக்கும். நான் பார்த்ததில், அது மிக உணர்ச்சிகரமான வலி. இது எல்லாம் எதன்மூலம் தொடங்குகிறது என்றால் பொய்... பொய்... பொய் மற்றும் சகிப்புத்தன்மை. இதன்மூலம் மட்டுமே நிகழ்கிறது.

நான் ஒரு ஐரோப்பிய கண்டத்தில் இருந்து வந்தவன் என்கிற முறையில், நிறைய நமது கையைமீறி நடந்துவிடுவதைப் பார்க்கமுடிகிறது. இதுதான் நம் நாட்டிற்கும் உலக நாடுகளுக்கும் இங்கு இருக்கும் ஒரே பயம். நாம் பயப்படும் நிகழ்வு, தற்போது அமெரிக்காவிலும் நிகழ்ந்துவிட்டது. நான் இதை நம்பவில்லை. ஆனால், சுயநலம் மற்றும் சிடுமூஞ்சித்தனத்தினால் ஏற்படும் மோசமான விளைவுகளை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

அழகாக நடத்திமுடிக்கப்பட்ட தேர்தல் குறித்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூச்சலிடுகிறார். பொய்களைச் சொல்லி, மக்களை மடைமாற்றும் சதிவேலைகளில் அவர் ஈடுபடுகிறார்.

எனது தந்தையும், எனது பக்கத்து வீட்டுக்காரர்களும் பொய்யான வழிகாட்டல்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான். அதனால் பொய்ப்பரப்புரைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை நான் நன்கறிவேன்.

அதிபர் ட்ரம்ப் ஒரு தோல்வியுற்ற தலைவர். வரலாற்றில் மிக மோசமான அதிபராக ட்ரம்ப் எப்போதும் பட்டியலிடப்படுவார். அவரிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல விசயம், அவரது பழைய ட்வீட்டுக்கும் அவருக்கும் தொடர்பற்றவராக மாற இருப்பது தான். தேர்தல் குறித்த நிறைய பொய்களையும் துரோகங்களையும் ட்ரம்ப் கட்டவிழ்க்கிறார்.

இது தொடர்பாக டெடி ரோஸ்வெல்ட் கூறியதை நினைவுகூர்கிறேன். தேச பக்தி என்பது நாட்டிற்கு உறுதுணையாக நிற்பது. அதிபருக்குத் துணையாக இருப்பது அல்ல.

ஜான் எப். கென்னடி எழுதிய 'Profiles in Courage' என்ற புத்தகத்தில் தனது சொந்த கட்சித்தொண்டர்கள் குறித்து ஒரு வரிகூட எழுதவில்லை. அவர்களின் பெயர்களைப் பார்க்கமுடியாது. நான் உங்களுக்கு அதுகுறித்து அவ்வாறு உறுதிபட தெரிவிக்கமுடியும்.

தனக்கு என்று ஒரு நீதியை வைத்துக்கொண்டு, அமெரிக்க நாட்டின் தலைமைப் பீடத்தில் கொடியை சிலர் நிலைநாட்டுகின்றனர். ஆனால், அது பணிபுரியவில்லை.

அங்கு ஜனநாயகம் மீண்டும் கட்டமைக்கப்பட்டது. ஜோ பைடன் தான் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என ஒரு மணி நேரத்தில் செனட் சபையில் சான்று அளிக்கப்படுகிறது.

எது நடந்தாலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது என்பது மிக முக்கியமானது. அதுதான் நமக்குத் தேவையான ஆரோக்கியம்.

ஜோ பைடனுக்கு எனது வாழ்த்துகள். நீங்கள் ஜெயித்ததால், இந்த நாடும் ஜெயித்துள்ளது. நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம். நீங்கள் எல்லோர் இதயங்களிலும் இருக்கிறீர்கள்.

எங்களுக்கு அதை நீங்கள் சேர்த்து வைத்து, அதனை திருப்பியளியுங்கள். அப்போது தான் அமெரிக்காவின் அரசியலமைப்பு பாதுகாக்கப்படும். ஜனநாயகத்திற்கு எதிராக மிரட்டல்கள் விடுக்கப்படும்போதும், நீங்கள் அதனை எதிர்த்து நிற்கவேண்டும். எல்லோருக்கும் வாழ்த்துகள்' என உணர்வுப்பூர்வமாக பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: லட்சியப் பெண்மணி கமலா ஹாரிஸ் - அமெரிக்கத் தேர்தலும் துளசேந்திரபுரம் அய்யனாரும்!

Last Updated : Jan 11, 2021, 1:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details