கரோனா வைரஸ் (தீநுண்மி) 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. இந்த நோய்க்காரணமாக இதுவரை 61 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நோய் மதம், இன, மொழி, நாடு, ஆண்டி, அரசன் எனப் பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் தாக்கிவருகிறது. அந்த வகையில், அர்மீனிய நாட்டின் பிரதமர் நிகோல் பாஷின்யன், அவரது குடும்பத்தினருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவிட்டுள்ள, "எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் கரோனா உறுதியாகி உள்ளது. ஆனால், நோய்க்கான எந்த அறிகுறியும் எனக்கு இல்லை. இந்த நோயிலிருந்து நான் விடுபடும்வரை தனிமையிலிருந்து தொடர்ந்து பணிபுரிவேன்.