தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கை கழுவுதல் எப்படி: காணொளி சவால் விடுத்த உலக சுகாதார அமைப்பு! - கோவிட்-19 வைரஸ்

நியூயார்க்: கோவைட் -19 வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கை கழுவது குறித்து ஒரு காணொளி காட்சி சவாலை உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ளது.

Are you washing your hands right? WHO launches #SafeHands challenge
Are you washing your hands right? WHO launches #SafeHands challenge

By

Published : Mar 15, 2020, 2:09 AM IST

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து, பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் மற்றும் சளி மூலம் பரவுகிறது. இதனால் கோவிட்-19 யை ஒரு தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது சுத்தமாக கை கழுவும் முறை குறித்து வீடியோ ஒன்றை உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமான சமூக வலைத்தளத்தில் #SafeHands என்ற ஹேஷ்டக்கை உருவாக்கி பகிர்ந்துள்ளது.

கை கழுவுதல் இப்படிதான்

அதில் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் டாக்ரர். டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் கை கழுவும் 11 முறைகள் குறித்து விளக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க....சுமார் ரூ.7,700 கோடி செலவில் 780 கி.மீ. பசுமை சாலை!

ABOUT THE AUTHOR

...view details