சீனாவில் உருவான கரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இதில், இங்கிலாந்தில் 578 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 ஆயிரத்து 658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அரசு நடைமுறைப்படுத்திவருகிறது. இதில் தற்போது பொதுப்பணியில் இருக்கும் காவல் துறையினர், கடை ஊழியர்கள் முன் பொதுமக்கள் யாராவது இருமினால் இரண்டு ஆண்டுகள் சிறைவிதிக்கப்படும் என பிரிட்டனின் பொது வழக்கு விசாரணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.