கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிங் பிஷர் நிறுவனமும் தனது தயாரிப்புகளை நிறுத்தியுள்ளது. ஆனால், ஊழியர்களை இன்னும் வீட்டிற்கு அனுப்பமுடியவில்லை. எனவே, அவர்களை வீட்டிற்கு அனுப்ப அரசு உதவ முன்வர வேண்டும் என விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அடுத்தடுத்து அவர் பதிவிட்ட பதிவுகளில், ”சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஊரடங்கு உத்தரவை இந்திய அரசு செயல்படுத்திவருகிறது. நாங்கள் மதிக்கிறோம். அனைத்து நிறுவனங்களும் முழுமையாக செயல்படுவதை நிறுத்திவிட்டன. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சமூக விலகலை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். வீட்டிலேயே இருந்து குடும்பம், செல்லப் பிராணிகளுடன் இனிமையாக நேரத்தை செலவிட வேண்டும். நானும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.