லண்டன்: பாதிரியார்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு வீடியோ கான்பரன்சிங் வாயிலாக குழந்தைகளை மகிழ்விக்க இருக்கின்றனர்.
வீடியோ கான்பரன்சிங்கில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்! - covid -19 and virtual santa
கிறிஸ்துமஸ் தாத்தா வடதுருவத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து உலகில் உள்ள அனைத்து குழந்தைகளிடமும் ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பேசவுள்ளார்.
![வீடியோ கான்பரன்சிங்கில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்! A virtual visit with Santa to replace traditional grottos](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9794522-375-9794522-1607339225576.jpg)
கிறிஸ்துமஸை முன்னிட்டு ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது பொழுதுபோக்குத் துறை அமைச்சகம். இதுகுறித்து பொழுதுபோக்குத் துறை அமைச்சகத்தின் நிர்வாக இயக்குநர் மேட் க்ரிஸ்ட், கரோனா சூழலில் அனைத்திலும் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. அதிலிருந்து பிறந்ததுதான் இந்த யோசனை. கிறிஸ்துமஸ் தாத்தா வடதுருவத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து உலகில் உள்ள அனைத்து குழந்தைகளிடமும் ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பேசவுள்ளார் என்றார்.
விக்கிபீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார். இதுகுறித்து அவர், கரோனா காலம் பலரது நிலையை மோசமானதாக மாற்றியுள்ளது. இது அனைவருக்கும் கடினமாக காலம். குழந்தைகளை, சிறுவர்களை மன ரீதியாக பாதிக்கும் துயரச் செய்திகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளன. எனவே மாறுதலுக்காக கிறிஸ்துமஸ் தாத்தாக்களை ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங்கில் பேச வைக்கவுள்ளோம். இந்த கரோனா காலத்தில் சூம் அப்ளிகேசன் பயன்படுத்துபவர்கள் அதிகரித்துள்ளனர். அதன்மூலம் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க இருக்கிறோம் என்றார்.