ஃபைசர் நிறுனத்தின் கரோனா தடுப்பு மருந்தின் அவசரப் பயன்பாட்டிற்கு பிரிட்டன், பஹ்ரைன் ஆகிய இரு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. பிரிட்டன் தடுப்பு மருந்தை மக்களுக்கு அளிக்கும் பணிகளையும் மேற்கொள்ள தொடங்கிவிட்டது.
அதன்படி அந்நாட்டில் கரோனாவால் உயிரிழக்க அதிக வாய்ப்புள்ள 80 வயதைக் கடந்த முதியவர்களுக்கு முதலில் கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், வடகிழக்கு இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹரி சுக்லா என்பவருக்கு முதலில் இந்தக் கரோனா தடுப்பு மருந்து வங்கப்படவுள்ளது.
இது குறித்து ஹரி சுக்லா கூறுகையில், "அந்நாட்டின் தேசிய சுகாதார சேவை மையம் இது குறித்து என்னை தொடர்புகொண்டது. நாட்டிலேயே முதல்முறையாக இந்த வைரஸ் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி. இது நாட்டு மக்கள் அனைவரது கடமையும்கூட" என்றார்.