கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. சீனாவில் பரவ தொடங்கிய நோய் ஐரோப்பா கண்டத்தையே உலுக்கிவருகிறது. ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இத்தாலியில் இன்று ஒரே நாளில் 837 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,428 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மூன்று வாரங்கள் ஆன நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையும் என சுகாதாரத்துறை மூத்த அலுவலர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இன்று மட்டும் 4.053 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 1,05,792 ஆக உ.யர்ந்துள்ளது.