தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

37 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பலி எண்ணிக்கை - உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: உலக நாடுகளில் இதுவரை 36 ஆயிரத்து 571 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

-coronavirus-cases-globally-death-toll-at-36571-who
-coronavirus-cases-globally-death-toll-at-36571-who

By

Published : Apr 1, 2020, 12:51 PM IST

சீனாவின் வூகான் நகரில் உருவாகிய கரோனா வைரஸ் தொற்று 200 நாடுகளைக் கடந்து பரவி மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இந்த வைரஸால் ஏழு லட்சத்து 54 ஆயிரத்து 948 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 36 ஆயிரத்து 571 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வைரஸின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் உள்ளதாகவும், ஆப்பிரிக்க நாடுகளில் குறைந்தளவில் காணப்படுலதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவை மிஞ்சும் அளவிற்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் 0.5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே காணப்படுகிறது.

சில நாடுகளிலுள்ள சுகாதார குறைபாடுகளின் காரணமாகவே இந்த வைரஸ் தொற்று அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுகாதார அமைப்புதெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:புடினுக்கு கைகொடுத்த மருத்துவருக்கு கரோனா: அதிர்ச்சியில் ரஷ்யா!

ABOUT THE AUTHOR

...view details