லண்டன்:அண்மைகாலமாக பழைய நாணயங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. இந்த நாணயங்களை இணையதளம் மூலம் எளிதில் விற்பனை செய்யவும், விளம்பரப்படுத்தவும் முடியும் என்பதால் பல்வேறு இணைய வர்த்தக நிறுவனங்கள் இதனை செய்துவருகிறது.
50 பைசாவுக்கு ரூ.15,000 - பழைய நாணயங்கள்
பழைய 50 பைசா நாணயம் ஒன்று 15,000 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
50 பைசாவுக்கு ரூ.15,000
அந்த வகையில், eBay தளத்தில் பழைய 50 பைசா நாணயம் விற்பனைக்கு வந்தது. இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் இங்கிலாந்து நாட்டின் கீவ் தோட்டத்தில் உள்ள சீன பகோடா கட்டடம் பொறிக்கப்பட்டிருக்கும். இதனை அந்நாட்டை சேர்ந்த ஒருவர் 142 பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 15000 ரூபாய்) வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: மகாத்மாவின் 150ஆவது பிறந்த தின கொண்டாட்டம்: 150ரூபாய் நாணயம் வெளியீடு