சுவீடன்தலைநகர் ஸ்டாக்ஹோமின் வடக்குப் பகுதியில் உள்ள ரிம்போ நகரில் கார் பந்தயம் நடத்தப்பட்டது. அதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பார்வையாளர் கூடத்தில் வேகமாக மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கார் பந்தயத்தில் விபத்து- 5 பேர் படுகாயம்! - car
ஸ்டாக்ஹோம்: சுவீடனில் கார் பந்தயத்தில் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பார்வையாளர் கூடத்தில் மோதியதில் ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![கார் பந்தயத்தில் விபத்து- 5 பேர் படுகாயம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2996772-thumbnail-3x2-sweden.jpg)
சுவிடன் கார் பந்தயம்
மேலும், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும், இந்த விபத்து தொடர்பாக ஒட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா என்ற தகவல் வெளியாகவில்லை.