மிலான் (இத்தாலி): மருத்துவமனையில் ஏற்பட்ட கார்பன் மோனாக்சைடு வாயுக்கசிவினால் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வாயுக்கசிவினால் ஐவர் உயிரிழப்பு - இத்தாலி மருத்துவமனையில் சோகம்! - latest international news in tamil
ரோம் நகர் அருகிலுள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட கார்பன் மோனாக்சைடு வாயுக் கசிவினால் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் மோசமான உடல் நிலையுடன் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இத்தாலி மருத்துவமனையில் சோகம்
ரோம் நகர் அருகிலுள்ள மருத்துவமனையில், இந்த பரிதாபச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தினால் மேலும் ஐந்து பேரும், இரண்டு ஊழியர்களும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் மோசமான உடல் நிலையுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த மோசமான விபத்தைத் தீயணைப்பு வீரர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். இத்தாலியில் கோவிட்-19 தொற்றுப் பரவலாக இருக்கும் வேளையில், மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த கோரச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.