ஏதென்ஸ்:கிரீஸ் நாட்டின் பைர்கோஸ் பகுதிக்கு 15 கி.மீ. தொலைவில் இன்று(டிச.29) 5.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இந்த நிலடுக்கத்தால், உயிரிழப்புகள், சேதங்கள் ஏதும் பதிவாகவில்லை. பைர்கோஸ் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிரீஸ் நாட்டில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பைர்கோஸ் நிலநடுக்கம்
கிரீஸ் நாட்டின் பைர்கோஸ் அருகே 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சேத விவரங்கள் வெளியாகவில்லை.
quake
இரண்டு நாள்களுக்கு முன்பு, கிரீட் தீவுக்கு அருகில் இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. முதலில் மதியம் 3.15 மணியளவில் ரிக்டர் அளவில் 5.2ஆகவும், மாலை 6.59 மணியளவில் 5.4 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கார்பதோஸ், காசோஸ், ரோட்ஸ் பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அந்தமான் நிக்கோபாரில் நிலநடுக்கம்!