கீவ்:ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே இன்று(பிப்.24) போர் வெடித்துள்ளது. ரஷ்ய ராணுவப்படையால் உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதிகளில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகின்றன. உக்ரைன் ராணுவமும் பதிலடிகொடுத்து, லுஹான்ஸ்க் பகுதியில் 5 ரஷ்ய விமானங்கள், 1 ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது.
இதனிடையே உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவி ரஷ்ய படை தாக்குதல் காரணமாக உக்ரைனில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.