சீனாவிலிருந்து பரவிய கரோனா தொற்று தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த பெருந்தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் ஈடுபட்டுவரும் நிலையில், ஸ்புட்னிக் வி (SPUTNIK V) என்ற கரோனா தடுப்பு மருந்தை ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக, அந்நாட்டின் அதிபர் புதின் கடந்த வாரம் அறிவித்தார்.
மூன்றாம் கட்ட ஆய்வக பரிசோதனை முழுமையாக முடிவடையாத காரணத்தால் ஸ்புட்னிக் வி நம்பகத்தன்மை குறித்து உலக விஞ்ஞானிகள் பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், அதன் மூன்றாம் கட்ட ஆய்வக பரிசோதனை அடுத்த 7 முதல் 10 நாள்களில் தொடங்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது.