Noble Price 2019:மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், உலக அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் மைல் கல் சாதனைப் படைப்போருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஸ்வீடன் ஆராய்ச்சியாளர் ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக அளிக்கப்படும் இந்த பரிசானது, உலகின் மிகவும் மதிக்கத்தக்கப் பரிசாகக் கருதப்படுகிறது.
அந்த வகையில், 2019ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் விழா, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றுவருகிறது. மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு புகழ்பெற்ற 'ராயல் ஸ்வீடிஷ் அகாடெமி ஆஃப் சைன்ஸ்' ( Royal Swedish Academy of Science) கல்வி நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டது.
இதில், இயற்பு அண்டவியல் (Physical Comology) கோட்பாடு சார்ந்த கண்டுபிடிப்புகளுக்காக ஜோம்ஸ் பெபில்சுக்கு நோபல் பரிசின் ஒரு பாதியும், சூரிய குடும்பத்தைப் போன்று வேறு ஒரு சூரிய குடும்பத்தில் உள்ள வேற்று கிரகத்தை (Exoplanet) கண்டுபிடித்ததற்காக மிஷெல் மேயர், டிடியர் குலோஸ் ஆகியோருக்கு மற்றொரு பாதியும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.