மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், உலக அமைதி, பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் மைல் கல் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் 'நோபல் பரிசு' வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 2019ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் விழா இன்று ( அக்டோபர் 7ஆம் தேதி) தொடங்கி 14ஆம் தேதி (அடுத்த திங்கள்கிழமை) வரை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெறுகிறது.
இந்நிலையில், முதல் நாளான இன்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில், பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ஜே ராட்கிளிஃப் (Sir Peter J. Ratcliffe), அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் கெய்லின் ஜூனியர் (William G. Kaelin JR), கிரெக் செமன்ஸா ( Gregg L. Semenza) ஆகியோருக்கு நோபல் பரிசானது பகிர்ந்து போகப்பட்டது.
நம் உடம்பிலுள்ள செற்கள் (Cells) ஆக்ஸிஜன் (O2) அளவை உணர்ந்து, அதற்கேற்றாற்போல் அவை எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்து கண்டறிந்ததற்காகவே இந்த நோபல் பரிசினாது வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோய், ரத்த சோகை ஆகிய நோய்களைக் குணப்படுத்துவதற்கு அவர்களின் ஆய்வு உதவிபுரியும் என்பது கவனிக்கத்தக்கது.
யார் அந்த மூன்று பேர்:
பீட்டர் ஜே ராட்கிளிஃப் :
1954 மே மாதம் 14ஆம் தேதி, பிரிட்டன் நாட்டின் லான்காஷையர் நகரில் பிறந்தவர் பீட்டர் ராட்கிளிஃப். 1972ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். தொடர்ந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சிறுநீரகம் குறித்து மருத்துவப் பயிற்சி மேற்கொண்டார்.