மாஸ்கோ:ரஷ்யாவின் பேரன்ட்ஸ் கடல் பகுதியில் படகில் பயணித்த 19 பேர் கொண்ட குழு மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது நோவாயா ஜெம்ல்யா தீவுப் பகுதி அருகே எதிர்பாராத விதமாக படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அந்நாட்டு பேரிடர் மீட்புக் குழுவினர் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இருவரை பாதுகாப்பாக மீட்டனர். காணாமல் போன 17 பேரை தேடும் பணித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.