தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஓய்வு பெற்ற முதியோர் காப்பகத்தில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு - முதியோர் காப்பகத்தில் தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் ஓய்வு பெற்ற முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

home-fire
home-fire

By

Published : Dec 15, 2020, 6:08 PM IST

ரஷ்யா பாஷ்கோர்டோஸ்தான் குடியரசின் இஷ்புல்தினோ கிராமத்தில் முதியோர் காப்பகம் செயல்பட்டுவருகிறது. இந்த கட்டடத்தில் 57 முதல் 80 வயதுடைய 15 முதியவர்கள் தங்கிவந்துள்ளனர். அங்கு நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் காப்பக ஊழியர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் உயிர் தப்பியுள்ளனர். உயிரிழந்த 11 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

மேலும் உள்ளூர் அலுவலர்கள் இப்பகுதியில் உள்ள அனைத்து காப்பகங்களிலும் கட்டடங்கள் உறுதித்தன்மையுடனும், பாதுகாப்பு அம்சங்களுடனும் உள்ளதா? தீயணைப்பு கருவிகள் உள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details