தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

11 ஆயிரம் ரஷ்யர்கள் உயிரிழப்பு - உக்ரைன் அறிவிப்பு - மாஸ்கோ

போர் தொடங்கியதில் இருந்து மொத்தம் 11ஆயிரம் ரஷ்யர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

11 K Russian forces killed
11 K Russian forces killed

By

Published : Mar 7, 2022, 5:56 PM IST

மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்.24ஆம் தேதி முதல் ரஷ்யப்போர் தொடங்கியுள்ளது. மேலும், பத்து நாள்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இதனிடையே மார்ச் 5ஆம் தேதி மனிதாபிமான அடிப்படையில் மரியபோல், வோல்னோவாகா ஆகிய நகரங்களிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நோக்குடன் ரஷ்யப் போரை தற்காலிகமாக நிறுத்தியது.

இதைத்தொடர்ந்து, ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே இன்று (மார்ச் 7) மூன்றாம் கட்டப்பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தப் போரினால் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த தரவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.

999 ராணுவ வாகனங்கள் அழிப்பு

அதில், ரஷ்யாவிற்குச் சொந்தமான 46 விமானங்கள், 68 ஹெலிகாப்டர்கள், 290 டாங்கிகள், 117 பீரங்கிகள், 50 பல்வேறு வகைப்பட்ட ராக்கெட் லான்சர்கள் என மொத்தம் 999 ராணுவ வாகனங்கள் தகர்க்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 454 வாகனங்கள், ரஷ்யாவின் 23 விமான எதிர்ப்புப் போர் அமைப்புகளும் சிதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், போர் தொடங்கியதில் இருந்து தற்போது மொத்தம் 11ஆயிரம் ரஷ்யப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் வேண்டுகோளின் அடிப்படையில் உக்ரைனில் உள்ள கார்கிவ் , கீவ், மரியபோல், சுமி ஆகிய 4 நகரங்களில் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற ரஷ்யா தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்வதாக இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புதினுடன் 50 நிமிடங்கள் உரையாடிய பிரதமர் மோடி - பேசியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details