கோவிட்-19 பாதிப்பு குறித்த தற்போதைய நிலவரம் குறித்து உலக சுகாதார அமைப்பு முக்கியக் கருத்தை வெளியிட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் செயல் இயக்குனர் டாக்டர் மைக்கெல் ராயன் பேசுகையில், "உலக அளவில் தற்போது 10இல் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக மக்கள் தொகை சுமார் 760 கோடியாக உள்ள நிலையில், சுமார் 7.6 கோடி பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான பாதிப்புகள் வெளியே வராத நிலையில், உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையை விட உண்மையான எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கும். எனவே, உலக மக்கள் அனைவரும் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிராமப்புறம், நகர்புறம், வயது வேறுபாடு, வாழ்க்கைச் சூழல் ஆகியவையும் கோவிட்-19 பாதிப்பில் முக்கியப் பங்கு வகிப்பதால் சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தை அறிவியலின் துணை கொண்டு இலகுவாக எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்பட உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக 3.56 கோடி பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உறுதிப்படுத்தப்படாமல் உள்ள எண்ணிக்கையையும் சேர்த்து இருமடங்காக 7.6 கோடி பேருக்கு கரோனா ஏற்பட்டிருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கரோனாவைக் கண்டு அஞ்ச வேண்டாம் - மாஸ்க்கை கழற்றி மாஸ் காட்டிய டொனால்ட் ட்ரம்ப்!