தமிழ்நாடு

tamil nadu

ஜப்பான் நாட்டின் அடுத்த பிரதமர் ’யோஷிஹைட் சுகா’

By

Published : Sep 14, 2020, 2:07 PM IST

டோக்கியோ : ஜப்பான் நாட்டின் அடுத்த பிரதமரை தேர்ந்தேடுக்கும் வாக்கெடுப்பில் யோஷிஹைட் சுகா 377 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார்.

uga
ga

ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்கிற சாதனை படைத்த ஷின்ஜோ அபே, உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பமியோ கிஷிடா, முன்னாள் ராணுவ அமைச்சர் ஷிகெரு இஷிபா, ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பிரதமர் போட்டிக்கான களத்தில் இறங்கினர்.

அந்நாட்டில், ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பை வகிக்கும் நபரே தான் நாட்டின் பிரதமராக இருப்பது வழக்கம். அதன்படி இன்று (செப்.14), ஜனநாயகக் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை இதில் பதிவு செய்தனர். சுகாவுக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு இருந்ததால் அவர் தான் பிரதமராக வலம் வருவார் என ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், அனைவரும் எதிர்பார்த்தபடியே சுமார் 377 வாக்குகளைப் பெற்று யோஷிஹைட் சுகா ஆளும் ஜனநாயகக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இருவருக்கும் மொத்தமாக 157 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தது. வெற்றிப் பெற்ற சுகா விரைவில் ஜப்பான் நாட்டின் பிரதமராக பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details