பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று 2015ஆம் ஆண்டு ஐ.நா. ஜூன் 21ஆம் தேதியை உலக யோகா தினமாக அறிவித்தது. அதன்படி, நேற்று சர்வேதச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இந்த தினத்தையொட்டி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கரோனா பெருந்தொற்று காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது என்று தெரிவித்தார்.
நீடிக்கும் அரசியல் குழப்பம்: கே.பி சர்மா ஒலி நம்பிக்கைக்குக் காரணம் என்ன?
இதேப் போன்று நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி நாட்டு மக்களிடையே உரையாடினார்.
அப்போது பேசிய அவர், "யோகா நேபாளத்தில் தான் உருவானது. யோகா உருவானபோது இந்தியா என்ற ஒரு நாடு இல்லை. இந்தியா பல ராஜ்யங்கள் ஆக இருந்தது. ஆனால் அதே நேரத்தில் யோகாவை சர்வதேச அளவில் கொண்டு செல்ல நம் நாடு தவறிவிட்டது.
அதைப் பயன்படுத்தி யோகாவிற்கு பிரதமர் மோடி சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று விட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இவர், "கடவுள் ராமர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது" எனக் கூறியது சர்ச்சைக்குள்ளானது.
இதையும் படிங்க:கடவுள் ராமர் நேபாளியா? சர்ச்சையை ஏற்படுத்திய சர்மா ஒலி