ஏமன் நாட்டில் புதிதாக அமைந்த அரசின் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள அமைச்சர்கள், சவூதியிலிருந்து அந்நாட்டு விமான நிலையத்தில் வந்திறங்கிய சிறிது நேரத்தில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் அமைச்சரவை உறுப்பினர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
சம்பவத்தின்போது ஐந்து பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதலில் சிக்கி 110-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015ஆம் ஆண்டுமுதல் உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுதி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.