தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தனது புதிய MIUI 12 பயனர் இயங்கு தளத்தை வெளியிட்டது சியோமி! - தனது புதிய MIUI 12 பயனர் இயங்குதளத்தை வெளியிட்டது சியோமி!

சீன நிறுவனமான சியோமி, தகவல் சாதனங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும். அவர்களின் கைபேசிகளுக்கு ஆண்ட்ராய்டு, பிரத்யேக பயனர் இயங்கு தளத்தை வழங்கி வருகிறது. இதன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பான MIUI 12 சீனத் தலைநகர் பீஜிங்கில் வெளியிடப்பட்டுள்ளது.

xiomi miui 12
xiomi miui 12

By

Published : May 21, 2020, 10:53 PM IST

பீஜிங் (சீனா): சியோமி தங்களின் கைபேசி, டேப்லெட் பயனர்களுக்காக புதிய MIUI 12 பயனர் இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியது.

MIUI 12

  • பல மேம்படுத்தப்பட்ட வசதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
  • பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
  • ஏதேனும் செயலிகள் படக்கருவிகளையோ, ஒலி வாங்கிகளையோ, தொடர்புகளையோ, இருப்பிடத்தையோ அணுக முற்பட்டால், உடனடியாக பயனர்களுக்கு சமிக்கை தரும் வண்ணம் புதிய இயங்கு தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ஆண்ட்ராய்டு 10 சைகைகள், புதிய விரைவான பதில் அம்சம், மிதக்கும் திரையமைப்புகள், மிராகாஸ்ட் காஸ்டிங் ஆகியவை உள்ளடங்கியுள்ளன.

என்னய்யா இது ஐபோன் மாதிரியே இருக்கு... ஹெச்டிசியின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ்!

இது பயனர்களுக்கு ஜூன் மாத இறுதியில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் பயனர்களின் தகவல்களைத் திருடுவதாக சியோமி நிறுவனத்தை பல நாடுகள் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details