தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வூஹானின் யாங்ஸி நதியில் மீண்டும் படகு சேவை! - வூஹான் கரோனா வைரஸ்

பெய்ஜிங்: கரோனா தொற்றின் பிறப்பிடமான வூஹான் நகரில் ஊரடங்கு அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்நகரின் ஜீவ நதியான யாங்ஸில் மீண்டும் படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

wuhan
wuhan

By

Published : Apr 22, 2020, 11:44 PM IST

Updated : Apr 23, 2020, 10:18 AM IST

உலகையே ஆட்கொண்டுவரும் கரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவின் வூஹான் நகரில், கடந்த ஜனவரியில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு சமீபத்தில் அகற்றப்பட்டது.

இதையடுத்து, வூஹான் வாசிகள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.

இந்தச் சூழலில், அவர்களை மேலும் குஷிப்படுத்தும் விதமாக, அந்நகர் வழியாகப் பாயும் யாங்ஸி நதியில் மீண்டும் படகு சேவை தொடங்கியுள்ளது.

சீனாவின் பல பகுதிகளோடு வூஹானை இணைக்கும் யாங்ஸி, திபெத் நாட்டின் டாங்குலா மலைகளில் தோன்றி ஆறு ஆயிரத்து 300 கி.மீ., பயணித்து கிழக்கு சீன கடலில் சங்கமிக்கிறது.

ஆசியாவின் மிக நீளமான நதி இது தான்! உலகளவில் நைல், அமேசானைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

சீன வரலாற்றின் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள யாங்ஸி, மீண்டும் திறக்கப்பட்ட செய்தி தங்களுக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதாக கூறுகின்றனர், வூஹான் வாசிகள்.

இதையும் படிங்க : கரோனா: வீட்டிலிருந்தபடியே மாதிரி சேகரிக்கும் கருவிக்கு அமெரிக்கா ஒப்புதல்!

Last Updated : Apr 23, 2020, 10:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details