கோவிட்-19 தொற்று சீனாவின் வூஹான் நகரில், கடந்தாண்டு இறுதியில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து, சீனா எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக அந்நாட்டில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. இதனால் அங்கு மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பிவருகிறது.
இந்நிலையில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வியாழக்கிழமை (ஜூன்.5) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில் ஷாங்காய் மாகாணத்தில் நான்கு பேர், சிச்சுவான் மாகாணத்தில் ஒருவர் என, மொத்தம் ஐந்து பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர நாடு முழுவதும் அறிகுறிகள் தென்படாத மூன்று பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது 297 "asymptomatic"(அறிகுறிகள் தென்படாத) நோயாளிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சீனாவில் இதுவரை கோவிட்-19 உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 83,027ஆக உயர்ந்துள்ளது.