ஆஸ்திரேலியா தலைநகர் கான்பேராவில் உள்ள பழங்கால ஒரு வீட்டின் புனரமைப்புப் பணியில் கட்டடத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வீட்டில் மேன்டில் பகுதியில் சுத்தப் படுத்தும் போது ஒரு செம்பு நிறத்தில் ஒரு சிறிய அட்டை இருப்பதைத் தொழிலாளர்கள் கண்டனர்.
இதை இந்த வீட்டின் உமையாளிடம் காட்டியபோது அவர் திகைப்புற்றார். இதைப் பார்த்த உடனே அது இரண்டாம் உலகப் போரில் ராணுவ வீரர் பயன்படுத்திய அடையாள அட்டை என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த அட்டையில் எழுதியிருந்த முகவரியை வைத்து, அதன் உரிமையாளரிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.
அந்த குடும்பத்திடம் விசாரிக்கையில், 1940ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா படையில் சேர்ந்த ஆண்ட்ரூ மெக்நீல் என்பவரே அந்த அட்டைக்குச் சொந்தகாரர் என்பதும், போரில் அவர் சிறை பிடிக்கப்பட்டு சிங்கப்பூரில் அடைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
"இது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று" என மெக்நீலின் பேத்தி டோனி மெக்நீல் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதையும் படிங்க : முகக் கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கிய இபிஎஸ்! துண்டை எடுத்து கட்டிக்கோங்க!!!