வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது காசநோய் மக்களைக் கொத்துக் கொத்தாக காவு வாங்கிய கொடிய நோய். இந்த ஆட்கொல்லி நோய்க் கிருமியை 1882 மார்ச் 24ஆம் தேதிடாக்டர் ராபர்ட் கோச்(Robert Koch) என்பவர் காசநோய்க்கான வைரஸை(TB bacillus) பெர்லினில் கண்டுபிடித்தார்.
அந்நாளில் இந்தக் கொடிய நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் உயிரைக் கொன்று குடித்துக் கொண்டிருந்தது. ராபர்ட்டின் கண்டுபிடிப்பு காசநோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.
மைக்ரோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் கிருமி 4,000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்களிடம் காணப்படுகிறது. ஆசியர்களுக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் டி.பி. கிருமி எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. இதனால் பல நூற்றாண்டுகளாக இந்தக் கிருமி குறிவைத்து ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.
காசநோயின் தாக்கம் மற்றும் புள்ளிவிவரம் நம்மை திடுக்கிடவைக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒன்பது மில்லியன் (90 லட்சம்) காச நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். இவர்களில் 30 லட்சம் பேர் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் போய்விடுகின்றனர். இந்த 30 லட்சம் பேரைக் கண்டறிந்து, சிகிச்சை அளித்து, குணப்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில் உலக காச நோய் தினம் கொண்டாடப்படுகிறது.
'நகம், முடியைத் தவிர எல்லா இடத்திலும் டி.பி. கிருமி தாக்கும் அபாயம் உள்ளது. நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்போதுதான் அது மற்றவர்களுக்கும் பரவுகிறது. காச நோய்க் கிருமியானது இருமல், தும்மல், சுவாசம், பேசுதல் மூலமாகப் பரவுகிறது. எவ்வளவு விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறோமோ, அந்த அளவுக்கு அந்த நோயாளிக்கும் சமூகத்துக்கும் நல்லது.
காச நோய் அறிகுறிகள்:
சளியுடன் கூடிய இருமல்
இரண்டு வாரத்துக்கு மேல் இருமல், காய்ச்சல்