குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. சமீபத்தில், யுனிசெஃப், சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், "உலகளவில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 160 மில்லியனாக உயர்ந்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 8.4 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகியுள்ளனர். இதை ஆராய்ந்து பார்க்கையில், கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, பல குடும்பங்களில் குழந்தைகளை வேலை செய்திட அனுப்ப நேர்ந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.
இதனைக் கருத்தில்கொண்டு, இந்தாண்டின் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான நாளின் கருப்பொருளாக "இப்போது செயல்படுங்கள்: குழந்தைத் தொழிலாளர்களை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்" என்பதை நிர்ணயித்துள்ளனர்.
280 விழுக்காடு அதிகரித்த குழந்தை தொழிலாளர்கள்
குழந்தை தொழிலாளர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், கோவிட்-19-க்கு முந்தைய சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 280 விழுக்காடு அதிகரித்துள்ளனர். கரோனா தொற்றின் தாக்கம் காரணமாகவும், பள்ளிகள் மூடல் காரணமாக வேலை செய்யும் குழந்தைகளின் விகிதம் 28.2 விழுக்காட்டிலிருந்து 79.6 ஆக அதிகரித்துள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
9 மில்லியன் கூடுதல் குழந்தைத் தொழிலாளர்கள்