பாகிஸ்தானில் உள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு, சுகாதார அவசர நிலை, திடக்கழிவு மேலாண்மை போன்ற திட்டங்களை செயல்படுத்த உலகவங்கி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக அந்நாட்டின் கராச்சி நகரிலும், சிந்து மாகாணத்திலும் தொடர்ச்சியாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதை சீரமைக்க அதிக முதலீடு தேவைப்படும் என பாகிஸ்தான் அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
அதனை ஏற்றுக்கொண்ட உலக வங்கி, தற்போது சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொகை மூலம் பாகிஸ்தானில் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள் குறைக்கப்பட்டும் எனவும் சுகாதரம் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் எனவும் உலக வங்கியின் பாகிஸ்தானுக்கான இயக்குநர் நிஜய் பென்ஹாசினே தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திட்டங்கள் மூலம் பாகிஸ்தானில் வேலைவாய்ப்பு அதிகரித்து பொருளாதார ஏற்றம் ஏற்படும் எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கோவிட்-19 கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் அமெரிக்கா; 3 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு