வங்கதேச நாட்டின் டாக்கா பகுதியில் பெண்களுக்காக பிரத்யேக பெண்ணழகிப் போட்டி, மூன்று நாள்கள் நடைபெற்றது. இப்போட்டியில், 30 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், 19 வயதான கல்லூரி மாணவி அவோனா ரஹ்மான், வெற்றி பெற்று மக்களின் பாராட்டுகளைப் பெற்றார்.
ஆனால், சர்வதேச அழகிப் போட்டிகளில் பிகினி உடையில் பெண்கள் ரேம்ப் வாக் செய்யும் நிலையில், வங்கதேசத்தின் பெண்ணழகிப் போட்டி வெற்றியாளர் அவோனாவும் மற்ற போட்டியாளர்களும் மேடையில் இறுக்கமான உடைகளால் உடலை மறைத்தப்படி நின்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வெற்றியாளர் அவோனா கூறுகையில், ‘நான் அணிந்திருந்த உடையை வைத்து யாரும் விமர்சிப்பார்கள் என்று எனக்கு தோனவில்லை. இருப்பினும் ஆடையில் கட்டுப்பாடு இருப்பதாக நிர்வாகம் தெரிவித்தனர். இந்த உடை கட்டுப்பாடு வங்கதேசத்தை பொருத்தவரை சரியானதுதான்’ என்றார்.