உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் காரணமாகப் பல நாடுகள் முடங்கியுள்ளன. இதனால், தினசரி வேலைக்குச் செல்பவர்களின் வாழ்கையில் இருள் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசு நாட்டில் குறைந்த வருமானம் பெறும் 10.2 மில்லியன் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க முடிவு செய்திருந்தது. அதற்கான திட்டம் முதலாவதாக முல்தான் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் தொடங்கியது. இந்தப் பணத்தைப் பெறுவதற்கு நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.