கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்துள்ள பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ஊரடங்கை திரும்பப் பெற பல நாடுகள் திட்டமிட்டுவருகின்றன.
விதிகள் திரும்பப் பெறப்பட்டால் வைரஸ் பரவல் அதிகரிக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை - விதிகள் திரும்பபெறப்பட்டால் வைரஸ் பரவல் அதிகரிக்கும்
ஊரடங்கு விதிகள் திரும்பப் பெறப்பட்டால் வைரஸ் பரவல் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
![விதிகள் திரும்பப் பெறப்பட்டால் வைரஸ் பரவல் அதிகரிக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை WHO](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6878830-655-6878830-1587469128961.jpg)
WHO
இதனிடையே, ஊரடங்கு விதிகள் திரும்பப் பெறப்பட்டால் வைரஸ் பரவல் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "விதிகளை திரும்பப் பெற இது சரியான தருணம் அல்ல. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதுவிதமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். நோய் பரவலைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்", என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.