உலக சுகாதார அமைப்பின் 74ஆவது பிராந்திய கூட்டம் நடைபெற்றது. இதில் தென் கிழக்காசிய பிராந்தியத்தின் இயக்குனர் பூணம் கேத்ரபால் சிங் பேசியுள்ளார். அதில், பிரந்திய சுகாதார உள்கட்டமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
கோவிட்-19 தாக்கத்தால் உலகம் முழுதும் சுகாதார கட்டமைப்பு பெரும் நெருக்கடிக்கு ஆளானது. எனவே எதிர்கால சவால்களை சந்திக்க இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டதில் பேசிய இயக்குனர் பூணம், கோவிட்-19 பெருந்தொற்று இதுவரை சந்தித்திராத சவால்களை ஏற்படுத்தியது. எந்தவொரு உலக நாடும் இதுபோன்ற பெரும் சவாலை எதிர்கொள்ள இயலவில்லை.