உலகளவில் கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவிவருகிறது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துவருகின்றனர். இந்நிலையில், உலகச் சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "நேற்று மட்டும் ஒன்றரை லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
'கரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது' - உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை! - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
ஜெனிவா: உலகளவில் கரோனா தொற்று அதிவேகத்தில் பரவிவருவதால் உலகச் சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

who
குறிப்பாக அமெரிக்க, ஆசியா நாடுகளில் அதிகளவில் கரோனா எண்ணிக்கை பதிவாகியுள்ளது. நாம் தற்போது ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். பலமான கட்டுப்பாடுகள் இப்போதுதான் தேவை. ஆனால் பல நாடுகள் ஊரங்கில் தளர்வுகளை அறிவித்துவருகின்றன. கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவருகிறது. முகக்கவசம் அணிவது, கை கழுவுதல், கிருமி நாசினி உபயோகிப்பது போன்றவற்றை மிகக் கவனமாகப் பின்பற்ற வேண்டும்" என்றார்.