தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீனாவில் திரையரங்குகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் திறப்பு! - சீனாவில் திரையரங்குகள் திறப்பு

பெய்ஜிங்: சீனாவில் கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சில நகரங்களில் திறக்கப்பட்டுள்ளன.

china
china

By

Published : Jul 21, 2020, 5:33 AM IST

சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் மனித உயிர்களை பறித்து வருகிறது. வைரஸ் தடுப்பு பணியில் பல முன்னணி நாட்டின் விஞ்ஞானிகள் களமிறங்கியுள்ளனர். பல நாடுகளில் பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததையடுத்து திரையரங்குகள் மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், "சீனாவில் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள ஷாங்காய், ஹன்ஷோ, குயிலின் ஆகிய மூன்று நகரங்களில் முதலாவதாக திரையரங்குகள் திறக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அதேபோல், திரையரங்கிற்குள் ஒவ்வொரு நபர்களும் ஒரு இருக்கை தள்ளிதான் அமர வேண்டும். திரையரங்கிற்கு வரும் அனைவருக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின் அனுமதிக்கப்படுவர்" எனக் குறிப்பிட்டுள்ளது.

Movie theatres reopen in many China cities

ABOUT THE AUTHOR

...view details