தமிழ்நாடு

tamil nadu

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு உணவு டெலிவரி செய்யும் ஜப்பான் விண்கலம்!

By

Published : May 28, 2020, 5:10 AM IST

விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவு, உபகரணங்களை எடுத்துச் சென்ற ஜப்பான் விண்கலம் ஒன்று சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது.

japan iss
japan iss

விண்வெளி குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட நாடுகளின் முயற்சியில் சர்வதேச விண்வெளி நிலையம் செயல்பட்டு வருகிறது.

சுழற்சி முறையில் இந்த விண்வெளி நிலையத்தில், தங்கி விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மாதக்கணக்கில் தங்கியிருக்கும் இவர்களுக்கு அவ்வப்போது ஆளில்லா விண்கலங்கள் மூலம் உணவு, உபகரணங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

அந்த வகையில், ஜப்பான் விண்வெளி நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட இதுபோன்ற விண்கலம் ஒன்று, மிட்சுபிஷி ராக்கெட் மூலம் கடந்த 20ஆம் தேதி விண்ணுக்கு ஏவப்பட்டது.

H-II Transfer Vehicle 9 (HTV- 9) என்று பெயரிடப்பட்ட விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது.

இந்த 12 டன் விண்கலத்தை 63ஆவது விண்வெளிக் குழுவைச் சேர்ந்த தலைவரும், நாசா விண்வெளி வீரருமான சிரிஸ் கேசிடி இயந்திரங்களின் உதவியோடு கைப்பற்றினார்.

இதையும் படிங்க : நான் இருக்கேன்; இந்தியா - சீனா மத்தியஸ்தத்திற்கு முன்வந்த ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details