சர்வதேச நாடுகளின் ராணுவத்தின் வீரத்தைப் பறைசாற்றும் வகையில் ரஷ்யா பாதுகாப்புத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டிகள் நடத்தபட்டு வருகின்றன. இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ள இந்த போட்டிகள், பீரங்கி அணிவகுப்புகளுடன் நேற்று தொடங்கியது.
ராணுவ ஒலிம்பிக்ஸ் ரஷ்யாவில் தொடக்கம் - ரஷ்யா
மாஸ்கோ: 2019ஆம் ஆண்டுக்கான சர்வதேச பீரங்கிப் போட்டிகள் நேற்று தொடங்கியுள்ளது.
ராணுவ ஒலிம்பிக்ஸ்
இந்த தொடரில் சீனா, ஈரான், வெணிசுலா உள்ளிட்ட 22 நாடுகள் பங்கேற்றுள்ளன. வரும் 17ஆம் தேதிவரை நடைபெறவுள்ள இத்தொடரில் ராணுவத்தின் வீரத்தை பறைசாற்றும் வகையில் பல போட்டிகள் நடைபெறவுள்ளன.
இப்போட்டிகளைக் காண பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்குக் குவிந்தவண்ணம் உள்ளனர்.